தேசிய செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு + "||" + Court extends interim protection of Karti Chidambaram

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxiscase #KartiChidambaram
புதுடெல்லி

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. 

இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஏப்ரல் 16 ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். 

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால் அவரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை, வரும் 27-ஆம் தேதி வரை கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. “எனக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம்” மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
எனக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
2. நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு
வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #NaliniChidambaram #KarthiChidambaram
3. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அவரை வரும் 27-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #KartiChidambaram #INXMediaCase
4. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. #KartiChidambaram #INXMedia