தேசிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ் + "||" + Cauvery issue Causing damage to Karnataka BJP Working! mmuralidhar rao

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறினார். #BJP

பெங்களூரு:

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாகவும், காவிரி பிரச்சினையை இழுத்தடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.

‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்’ என்றார் முரளிதர ராவ்.

கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.