தேசிய செய்திகள்

‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி வெளிநாடு செல்வது ஏன்? பிரவீன் தொகாடியா கேள்வி + "||" + Pravin Togadia slams PM Modi’s foreign tour when ‘daughters are not safe’

‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி வெளிநாடு செல்வது ஏன்? பிரவீன் தொகாடியா கேள்வி

‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி வெளிநாடு செல்வது ஏன்? பிரவீன் தொகாடியா கேள்வி
‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி வெளிநாடு செல்வது ஏன்? என்று பிரவீன் தொகாடியா கேள்வி எழுப்பி உள்ளார். #PravinTogadia #PMModi
ஆமதாபாத், 

விசுவ இந்து பரி‌ஷத் சர்வதேச செயல் தலைவராக இருந்தவர் பிரவீன் தொகாடியா. அதன் சர்வதேச தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தன் ஆதரவாளர் தோல்வி அடைந்ததையடுத்து, அந்த அமைப்பில் இருந்தே தொகாடியா விலகினார். அவர் பா.ஜனதாவை எதிர்த்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளை காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.

இந்நிலையில், இன்று அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் மோடி இன்று வெளிநாடு சென்றதை விமர்சித்தார். ‘‘இன்று நமது வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நமது மகள்கள் வீட்டில் பாதுகாப்பாக இல்லை. அப்படி இருக்கும்போது, நமது பிரதமர் வெளிநாட்டுக்கு செல்வது ஏன்?’’ என்று தொகாடியா கூறினார்.