கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட்; கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி + "||" + IPL Cricket; Kolkata Knight Riders won by 71 runs

ஐ.பி.எல் கிரிக்கெட்; கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட்; கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #IPL2018
கொல்கத்தா,

11 வது ஐபிஎல் போட்டியின் 13 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்று சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2.3வது ஓவரில் சுனில் நரேன் வெறும் 1 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக உத்தப்பா களமிறங்கினர். இருவரும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். கொல்கத்தா அணியில் ஒரு புறம் ரன் வேகம் எகிற, மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.


ஆட்டத்தின் 13.4 வது ஓவரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, நிதிஷ் ராணாவுடன் அதிரடி ஆட்டக்காரர் ஆந்தரே ரசூல் கை கோர்த்தார். ரசூலின் அதிரடி ஆட்டம் காட்டி வெறும் 12 பந்துகளை எதிர்கொண்ட ரசூல் 41 ரன்கள் (6 சிக்ஸர்கள்) சேர்த்த நிலையில் டிரண்ட் போல்ட் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா தனது அரை சதத்தினை பூர்த்தி செய்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தரப்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் மற்றும் டிரண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாட தொடங்கியது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் முதலில் களமிறங்கிய கேப்டன் கெளதம் காம்பீட் 8(7), ஜாசன் ராய் 1(3), சரியாக சோபிக்காத நிலையில், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4(3) தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அடுத்து களமிறங்கிய ரிசாப் பாண்ட் 43(26), கிளன் மேக்ஸ்வெல் 47(22) அதிரடியில் கலக்கிய போதும் குல்தீப் யாதவ் அவர்களின் விக்கெட்டை எடுத்து போட்டியின் போக்கை தலைகீழாக மாற்றினார்.

அடுத்து ஆட வந்த ராகுல் தேவாதியா 1(2), விஜய் சங்கர் 2(4), கிரிஸ் மோரிஸ் 2(3), முகமது சமி 7(6), ஷாபாஸ் நதீம் 0(0), டிரண்ட் போல்ட் 0(2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிக பட்சமாக குல்தீப் யாதவ், சுனில் நரைன் தலா 3 விக்கெட்டுகளும் இதர பவுலர்கள் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன் முலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  
தொடர்புடைய செய்திகள்

1. ‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
3. உலக கோப்பை ஆக்கியில் வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி; 5-0 கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
4. புரோ கபடி: புனே அணி ‘திரில்’ வெற்றி
புரோ கபடியில், அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
5. மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.