தேசிய செய்திகள்

அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் சந்திரபாபு நாயுடு உத்தரவு + "||" + Chandrababu Naidu to observe fast

அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் சந்திரபாபு நாயுடு உத்தரவு

அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் சந்திரபாபு நாயுடு உத்தரவு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் உண்ணாவிரதம் இருக்க எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். #ChandrababuNaidu
அமராவதி, 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, தனது பிறந்தநாளான 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில், அவரது தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில், விஜயவாடாவில், சந்திரபாபு நாயுடுவுடன் 9 மந்திரிகளும் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளிலும், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் அதே நாளில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். மேலும், 21-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துமாறும் உத்தரவிட்டார்.