தேசிய செய்திகள்

ஏன் இந்த வக்கிர புத்தி? இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கத்துவா சிறுமியின் வீடியோ + "||" + Asifa’s Name Becomes Top Trending Search On Porn Websites. Could We Stoop Any Lower?

ஏன் இந்த வக்கிர புத்தி? இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கத்துவா சிறுமியின் வீடியோ

ஏன் இந்த வக்கிர புத்தி?  இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கத்துவா சிறுமியின் வீடியோ
காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வீடியோக்கள் கிடைக்குமா என்று இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. #Asifa
புதுடெல்லி

காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது  சிறுமி ஒருவர் 8  பேரால் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த அதிர்ச்சி முடியும் முன்பே இன்னொரு பேரதிர்ச்சி வந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இணையம் முழுக்க, சில ஆண்கள் அந்த காஷ்மீர் சிறுமியின் அந்தரங்க வீடியோ ஏதாவது கிடைக்குமா என்று பாலியல் தளங்களில் தேடி இருக்கிறார்கள். 3 நாட்களில் பாலியல் தளங்களில் அதிகம் தேடப்பட்ட பெயர், அந்த காஷ்மீர் சிறுமியின் பெயர்தான் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த சிறுமி கடைசியாக வாழ்ந்த 5 நாட்கள் மிகவும் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு, சாப்பாடு கூட கொடுக்காமல் கொலை செய்யப்பட்டார். மரணத்திற்கு பின் சிறுமியின் உடலை கூட எரிக்க, அந்த ஊர்  ஆட்கள் விடவில்லை. இந்த நிலையில் தற்போது எல்லாம் முடிந்த பின்பும் இணையத்தில் அந்த சிறுமியின் ஆன்மாவை களங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் சிலர்.

இந்த தேடுதல் எல்லாமே இந்தியாவில் இருந்து செய்யப்பட்டு இருக்கிறது. எல்லோரும் காஷ்மீர் சிறுமிக்காக கண்ணீர் விடும் போது, சில ஆண்களின் மனநிலை மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்ற கேள்வியை இது எழுப்பி இருக்கிறது. இறந்த பின்பும் கூட ஒரு சிறுமியை நிம்மதியாக விடாத சமூகம் என்ன மாதிரியான சமூகம்?