தேசிய செய்திகள்

வெளிநாடு செல்ல அனுமதி கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் மனு + "||" + Actor Salman Khan filed petition before Jodhpur District and Sessions Court seeking permission to visit four countries

வெளிநாடு செல்ல அனுமதி கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் மனு

வெளிநாடு செல்ல அனுமதி கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் மனு
வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக்கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் மனு தாக்கல் செய்துள்ளார். #BlackBuckPoachingCase #SalmanKhan
ஜோத்பூர்,

1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த இந்திப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது சல்மான்கான் வனப்பகுதிக்கு சென்று 2 மான்களை வேட்டையாடினார்.
வனப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டு கிராம மக்கள் சென்ற போது துப்பாக்கியுடன் ஜீப்பில் வந்த சல்மான்கான் பிடிபட்டார். 20 ஆண்டுகள்   நடந்த இந்த வழக்கில் ஜோத்பூர் கீழ் கோர்ட்டு சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. 

இந்த வழக்கில் இரண்டு நாட்கள் சிறைவாசம் அனுபவித்த சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக்கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் மனு தாக்கல் செய்துள்ளார். நான்கு நாடுகளுக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று சல்மான்கான் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.