மாநில செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன் + "||" + Nirmala Devi affair Order the inquiry governor has authority Minister Anbazhagan

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன்

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் அன்பழகன் கூறி உள்ளார். #Nirmaladevi
சென்னை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அதிகாரிகளை அனுசரித்து சென்றால், மதிப்பெண் மற்றும் பணம் ஆகியவை தருவதாக அவர் பேசிய ஆடியோ வைரலானது.

இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. எனவே பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் பன்வாரிலால், இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.

 பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை ஸ்டாலின் விமர்சித்தார்.  கவர்னரின் இந்த உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தும் . பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையது எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் உறுதியாக தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்ற கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2. “மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்
“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” என்ற தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வழியாக தற்போது வெளியாகியுள்ளது.
3. எனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் உள்ளது விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி புகார்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி உள்பட 3 பேருக்கு 1,360 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.