தேசிய செய்திகள்

வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்.பி.ஐ. கவர்னருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு + "||" + Parliamentary panel calls RBI Governor Urjit Patel on May 17 to answer queries related to bank scams

வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்.பி.ஐ. கவர்னருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு

வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்.பி.ஐ. கவர்னருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு
வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்.பி.ஐ. கவர்னருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு விடுத்து உள்ளது. #ParliamentaryPanel #RBI #BankScams
புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு மேல் பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்று பிற வங்கியிலும் தொழில் அதிபர்கள் மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகியது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. வங்கிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையானது ஆர்.பி.ஐ.யிடம் சமர்பிக்கப்படுகிறது. வங்கிகளின் கண்காணிப்பகமாக இருக்கும் ஆர்.பி.ஐ.யிடம் மோசடி தொடர்பாக சந்தேகம் எழாதது தொடர்பாகவும் விமர்சிக்கப்படுகிறது. இம்மோசடிகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் கைது மற்றும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில், வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேலுக்கு பாராளுமன்ற குழு அழைப்பு விடுத்து உள்ளது. 17-ம் தேதி ஆஜராக கேட்டுக்கொண்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 135 சைபர் குற்றங்களில் தொடர்புடைய 27 வயது இளைஞர் கைது
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி பலரை ஏமாற்றிய 27 வயது இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.
2. ரூ.5,000 கோடி வங்கி மோசடியில் குஜராத் நிறுவனத்தின் இயக்குநர் துபாயில் கைது
ரூ.5,000 கோடி வங்கி மோசடியில் தொடர்புடைய குஜராத் நிறுவனத்தின் இயக்குநர் நிதின் ஜெயந்திலால் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. ரூ.2,654 கோடி வங்கி மோசடி குஜராத் தொழில் அதிபர், மகன்களுடன் கைது சி.பி.ஐ. நடவடிக்கை
ரூ.2,654 கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபரையும், அவரது மகன்களையும் கைது செய்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து உள்ளது. #BankFraud
4. வங்கியில் ரூ.95 லட்சம் மோசடி ஊழியர் உள்பட 2 பேர் கைது
நெல்லையில், வங்கி ஒன்றில் தரம் குறைந்த நகைகளை அடகு வைத்து ரூ.95 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.