தேசிய செய்திகள்

வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாதது ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை காட்டுகிறது -மம்தா பானர்ஜி + "||" + Mamata sees currency shortage as a reminder of demonetisation

வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாதது ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை காட்டுகிறது -மம்தா பானர்ஜி

வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாதது ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை காட்டுகிறது -மம்தா பானர்ஜி
வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையானது ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை காட்டுகிறது என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். #CashCrunch #CashlessATMs #MamataBanerjee
கொல்கத்தா,

நாடு முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலை நீடிக்கிறது என்ற தகவலானது நாடு முழுவதும் இருந்து வெளியாகி உள்ளது.

குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தேவைக்கு அதிகமான அளவு பணம் இருப்பதாக மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறிஉள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 

வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையானது ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை காட்டுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

“பல மாநிலங்களில் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற நிலை காணப்படுகிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் இல்லை. இது உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை காட்டுகிறது. தேசத்தில் நிதி நெருக்கடி நிலை தொடர்கிறது?” என கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒ பிரையன் பேசுகையில், “இது நிதி நெருக்கடியாகும். 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என மோடி கூறினார். 1.5 வருடத்திற்கு மேலாகியும் எதுவும் மாறவில்லை. இன்னும் பணம் இல்லாத நிலை உள்ளது,” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா பின்னடைவு, 2019 தேர்தலுக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கியது -மம்தா பானர்ஜி
5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா பின்னடவை சந்தித்துள்ளது தொடர்பாக மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில் 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என கூறியுள்ளார்.
2. மம்தா பானர்ஜி அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது - அமித் ஷா சொல்கிறார்
பா.ஜனதாவின் யாத்திரையின் மீது மம்தா பானர்ஜிக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளது, அவருடைய அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.
3. திரிணாமுல் காங்கிரஸ் பிற மாநிலங்களிலும் போட்டியிடும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் பிற மாநிலங்களிலும் போட்டியிடும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4. பாஜக இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பாஜக இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று மேற்குவங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி விமர்சித்தார்.
5. மேற்கு வங்காளத்தில் 96 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கின்றன; மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 96 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.