தேசிய செய்திகள்

2 சகோதரிகள் சுட்டுக்கொலை உடல்கள் வயல் வெளியில் வீச்சு + "||" + Another crime against women in UP: Teen sisters shot dead, bodies found in field

2 சகோதரிகள் சுட்டுக்கொலை உடல்கள் வயல் வெளியில் வீச்சு

2 சகோதரிகள் சுட்டுக்கொலை உடல்கள் வயல் வெளியில் வீச்சு
உத்தரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில் 13 மற்றும் 17 வயதுடைய 2 சகோதரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
லக்னோ

நேற்று மாலை சகோதரிகள் இருவரும் வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.   இன்று காலை இருவரின் உடலும் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் ,இருந்த ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. கெலமுவில் உள்ள கிராமவாசிகள் மூலம் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து சகோதரிகளின் தந்தை கூறியதாவது:-

"எங்களுக்கு காலையில் தான் எங்கள் மகள்கள் கொல்லப்பட்டாதாக தகவல் கிடைத்தது. இது அதிர்ச்சியாக இருந்தது. எங்களுக்கு யாரும் பகைவர்கள் இல்லை. என் மகள்களை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று எனக்கு புரியவில்லை என கூறி உள்ளார்.

இதே போல் இதே மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது.