மாநில செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக்குழு வாபஸ் + "||" + Professor Nirmadevi case Change to CBCID

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக்குழு வாபஸ்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக்குழு வாபஸ்
நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக்குழு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. #NirmalaDevi
சென்னை

மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில், அவரிடம் இருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போன்களில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், பல உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. 

 அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? யாரிடமெல்லாம் அதிகம் பேசியிருக்கிறார்? அவருக்கு வந்த எஸ்.எம்.எஸ், வாட்ஸ்-அப் தகவல்கள் என அனைத்தையும் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். நிர்மலா தேவியின் செல்போனில் இருக்கும் பெண்கள், அவரால் சீரழிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளாக இருப்பார்களோ என்கிற அச்சமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்து உத்தரவிட்டது.

தற்போது அந்த விசாரணைக்குழு வாபஸ் பெறுவதாக துணைவேந்தர் செல்லத்துரை கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. எனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் உள்ளது விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி புகார்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி உள்பட 3 பேருக்கு 1,360 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
2. பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யபட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். #NirmalaDevi
3. நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரம் அவகாசம்
நிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கவர்னர் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. #NirmalaDevi
4. நிர்மலா தேவி, என் கணவரை 3 முறை சந்தித்து உள்ளார் - உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா
நிர்மலா தேவி, என் கணவரை 3 முறை சந்தித்து உள்ளார் என உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா கூறி உள்ளார். #NirmalaDeviCase
5. விசாரணை அதிகாரி சந்தானத்திடம் பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்
மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் குழுவிடம் மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்தனர். மாணவிகள் சார்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் சந்தானம் குழுவிடம் புகார் தெரிவித்தார்.