தேசிய செய்திகள்

ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதை ஏற்கவில்லை: ஆர்.எஸ்.எஸ் + "||" + Do not accept any kind of caste-based discrimination: RSS

ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதை ஏற்கவில்லை: ஆர்.எஸ்.எஸ்

ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதை ஏற்கவில்லை: ஆர்.எஸ்.எஸ்
ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதை ஏற்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. #RSS #MohanBhagwat
புதுடெல்லி,
 
ஜாதி ரீதியாக யாரும் பாகுபாடு காட்டக் கூடாது; ஜாதிப் பாகுபாடுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்கவில்லை என்று அந்த அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் அருண் குமார் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைவரும் ஒரே கோயிலில் வழிபட வேண்டும். ஒரே கிணற்றில் நீரைப் பயன்படுத்த வேண்டும். 

இறப்புக்குப் பின்புகூட அனைத்து ஜாதியினருக்கும் ஒரே இடுகாடு, சுடுகாடு இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இப்போது மட்டுமல்ல, தொடக்கத்தில் இருந்தே இதுதான் இந்த அமைப்பின் கொள்கை.சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்போதுதான் ஒற்றுமையுடன் வாழ முடியும். இதற்கு ஜாதி தடையாக இருக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.