உலக செய்திகள்

ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: எரிமலை சீற்றம் அதிகரித்தது + "||" + Major quake hits Hawaii, prompts further volcano eruptions

ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: எரிமலை சீற்றம் அதிகரித்தது

ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: எரிமலை சீற்றம் அதிகரித்தது
ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு எரிமலை சீற்றம் மேலும் அதிகரித்து உள்ளது. #EarthQuake #VOLCANOHAWAII
லாஸ் ஏஞ்சல்ஸ், 

அமெரிக்காவில் உள்ள ஹாவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால், எரிமலை சீற்றம் மேலும் அதிகரித்துள்ளது.   இதனால்,  அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக,  ஹவாய் தீவில் மக்கள் குடியிருக்கும் பகுதி அருகே உள்ள கீலவேயா எரிமலையில் சீற்றம் ஏற்பட்டு இருந்தது. சமீப காலமாக ஹவாய் தீவில் ஏற்பட்டு வந்த நில நடுக்கங்களின் எதிரொலியாகத்தான் இந்த எரிமலையில் சீற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. எரிமலை, குழம்பினை கக்கி வருகிறது. இதை அடுத்து அந்தப் பகுதியில் வசித்து வருகிற மக்கள் கட்டாயமாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அங்கு இருந்து 1,500 பேர் வெளியேறினர். அவர்களுக்காக அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், தங்குமிடங்களை அமைத்து உள்ளது.

எரிமலைச்சீற்றத்தின் காரணமாக சாலையை பிளந்து கொண்டு, குழம்பு வானை நோக்கி பீறிட்ட காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் காட்டின.எரிமலை குழம்பானது 150 அடி உயரத்துக்கு பீறிட்டு, 183 மீட்டர் சுற்றளவுக்கு பரவுவதாக தகவல்கள் கூறுகின்றன. எரிமலைக்குழம்பு காட்டுக்கும் பரவி அங்கு மரங்கள் எரியும் வாசனையையும், கந்தக வாசனையையும் உணர முடிவதாக ஜெரேமியா என்பவர் தெரிவித்து உள்ளார். எரிமலை சீற்றத்தின் காரணமாக அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.