உலக செய்திகள்

ஈரான் விவகாரம் தொடர்பாக மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேச்சு + "||" + Israeli PM Netanyahu briefs Modi on Iran's 'nuclear breaches'

ஈரான் விவகாரம் தொடர்பாக மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேச்சு

ஈரான் விவகாரம் தொடர்பாக மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேச்சு
ஈரான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேசியுள்ளார். #Iran
ஜெருசலேம்,

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில், அந்த நாட்டுடனும், இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடனும் ஈரான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அது ஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்ளவும், பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விலக்கிக்கொள்ளவும் வழிவகுத்து உள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருகிறார். 12-ந் தேதிக்குள் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார். அதற்கு ஏற்ற வகையில், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வந்து உள்ளது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்பை ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் வலியுறத்தியுள்ளார்.

இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ, ஈரான் விவகாரம் குறித்து மூன்று முக்கிய சர்வதேச தலைவர்களுடன் பேசியதாக அந்நாட்டு ஊடக ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியாருடன் இஸ்ரேல் பிரதமர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வரும் மே 12 ஆம் தேதி அமெரிக்கா வெளியேற இருப்பதாகவும், ஈரானுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதிக்க இஸ்ரேல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.