மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்பு + "||" + Emphasize 7 feature demands Sterlite resistant Fasting Participation actor Mansoor Ali Khan

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்பு
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்று உள்ளார். #SterliteProtest

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதித்து அவதிப்படுவதாக கூறி அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 83&வது நாளை எட்டியுள்ளது.  அவர்களது போராட் டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் தமிழ் மாந்தன் தலைமையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண  நிதி வழங்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்,  தூத்துக்குடி மக்களின் உடல் நிலையை கண்டறிய சிறப்பு மருத்துவகுழு அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட்ஆலைக்கு ஆதரவாக இருந்து வந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. 

இதில்  தூத்துக்குடி நகர்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் மன்சூர் அலிகானும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.