தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Terrorist Killed In Srinagar's Chattabal, Encounter On

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள சட்டல் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். #Encounter #JammuAndKashmir

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள சட்டபால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே, பல மணி நேரமாக நீடித்து வரும் இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு படையினர் தரப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.