மாநில செய்திகள்

எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன- கலெக்டர் தகவல் + "||" + Ernakulam For the students of the NEET Exam The necessary facilities are arranged Collector info

எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன- கலெக்டர் தகவல்

எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன- கலெக்டர் தகவல்
நீட் தேர்வு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என எர்ணாகுளம் கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.#NEETExam #HelpNEETStudents

சென்னை

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் தமிழக மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய உதவியை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை போடாமல் ராஜஸ்தான், கேரள மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான தேர்வு எழுத கேரள மாநிலத்திற்கு வருகை தருவோர்  பல்வேறூ தர்ப்பினர் உதவி செய்வதாக அறிவித்து உள்ளனர்

எர்ணாகுளம் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தமிழக மற்றும் கேரள அரசுகள் தரப்பில் உதவி மையங்கள் ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை என மாணவர்கள்  தரப்பில் புகார்  எழுந்து உள்ளது.

இந்த நிலையில்  எர்ணாகுளம் கலெக்டர், நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து எர்ணாகுளம் கலெக்டர் கூறும் போது, “ எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்ட உதவி மையங்களில் தமிழ்பேசும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

தங்கும் விடுதி, உணவு போன்றவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்த பட்டு உள்ளது” இவ்வாறு அவர்  கூறி உள்ளார்.