தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: 14 பேர் கைது + "||" + 14 Arrested Over Gang-Rape, Murder Of Jharkhand Girl Who Was Burnt Alive

ஜார்க்கண்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: 14 பேர் கைது

ஜார்க்கண்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: 14 பேர் கைது
ஜார்க்கண்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Jharkhand
ராஞ்சி,

ஜார்க்கண்டில் நக்சலைட் இயக்கத்தினர் ஆதிக்கம் நிறைந்த சாத்ரா மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். மாணவியின் பெற்றோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். 

அவர்கள் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டு உள்ளனர். பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தோப்பு காரணம் போடவும், ரூ. 50 ஆயிரம் அபராதம் கட்டவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து கோபம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை அடித்து உள்ளது, சிறுமியை தீ வைத்து எரித்து கொன்று உள்ளது. 

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக 14 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை இன்னும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.