மாவட்ட செய்திகள்

கர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி பிரசாரம் + "||" + Congress needs to be punished for Karnataka's better future, says Modi.

கர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி பிரசாரம்

கர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி பிரசாரம்
கர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். #PMmodi #KarnatakaElections2018
துமகுரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று துமகுருவில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

 அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி வறுமை பற்றி பல முறை பேசியுள்ளது. ஆனால், ஒரு ஏழை தாயின் மகன் பிரதமர் ஆன பிறகு அக்கட்சி வாய் மூடி மவுனம் காக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மறைமுக புரிதல் உள்ளது. விவசாயிகளின் தற்போதைய மோசமான நிலைக்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே காரணம். விவசாயிகளின் கஷ்டங்களை துடைத்தெறிய நாங்கள் முயற்சித்து கொண்டு இருக்கிறோம். 

70 ஆண்டுகளாக விவசாயிகளை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து வருகிறது. இந்திரா காந்தி காலத்தில் இருந்தே, காங்கிரஸ் கட்சி  தேர்தலில் வெற்றி பெற ஏழை சமூகத்தையே முட்டாளாக்கி வருகிறது. கங்கிரஸ் பொய்களின் கட்சி.  வாக்காளர்களிடம் பல முறை பொய்களை மட்டுமே அக்கட்சி கூறி வருகிறது. விவசாயிகள் பற்றியோ, ஏழைகள் பற்றியோ காங்கிரஸ் கட்சிக்கு எந்த அக்கறையும் இல்லை. கருப்பு பணத்தால் தனது பைகளை நிரப்புவதில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது.
 
அனைத்து கருத்து கணிப்புகளும் மதசார்பற்ற ஜனதா தளம் 3-வது இடத்தில் தான் வரும் என கூறுகின்றன. காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது”  இவ்வாறு அவர் பேசினார்.