மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழகம் 6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும் உருவாக்கி உள்ளது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் + "||" + University of Madras 6 Presidents, 2 Nobel laureates Has created President RamNath Kovind

சென்னை பல்கலைக்கழகம் 6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும் உருவாக்கி உள்ளது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சென்னை பல்கலைக்கழகம்  6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும்  உருவாக்கி உள்ளது  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சென்னை பல்கலைக்கழகம் 6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும் உருவாக்கி உள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.#RamNathKovind #MadrasUniversity
சென்னை

சென்னை பல்கலைக் கழக 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு வேந்தரும் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். துணை வேந்தர் டாக்டர் துரைசாமி வரவேற்று பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசினர்.

விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று பட்டம் பெற்ற மாணவமாணவிகள் பெற்றுள்ள பட்டத்தை தனக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது பல்கலைகழகங்களுக்கு எல்லாம் அறிவுசார் பெட்டகமாக திகழ்கிறது. 

குறிப்பாக தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் தாய் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகம் 6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும் நாட்டுக்கு உருவாக்கி தந்துள்ளது. 

பசுமை புரட்சிக்கு வித்திட்ட செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பல விஞ்ஞானிகளையும், பல துறைகளில் முத்திரை பதித்து வரும் சாதனையாளர்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் நாட்டுக்கு கொடுத்து பெருமை சேர்த்துள்ளது. 

இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல உயர்கல்வி துறைகள் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு மிகவும் உறுதுணையாக அமையும். கல்வி நிறுவனங்கள் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் கற்ற கல்வியையும், திறமையையும் பங்களிக்க வேண்டும்.

ஜனாதிபதி மாளிகையை போல் சென்னை பல கலைக்கழகமும் பழம் பெருமை வாய்ந்தது. ஜனாதிபதி மாளிகை எப்படி அனைவருக்கும் பொதுவானதோ அதே போல் சென்னை பல்கலைக் கழகமும் எல்லோருக்கும் பொதுவானது.  ஜனாதிபதி மாளிகைக்கு எல்லோரும் வந்து செல்லலாம். உலகிலேயே தமிழ் மொழி பழமையும், தொன் மையும் வாய்ந்தது.  இவ்வாறு அவர் பேசினார்.