மாநில செய்திகள்

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எர்ணாகுளம் உதவி மைய விவரங்கள் + "||" + For students who go to write NEET Ernakulam Help Center Details

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எர்ணாகுளம் உதவி மைய விவரங்கள்

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எர்ணாகுளம் உதவி மைய விவரங்கள்
பிறமாவட்டங்களில் இருந்து நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எர்ணாகுளம் உதவி மைய விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. #NEET
நெல்லை

பிற மாவட்டங்களில் இருந்து எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களை நேரடியாகவும், தொலைபேசியிலும் அணுகலாம்.

90615 18888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தகவல்களை பெறலாம்.

திருநெல்வேலி மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் எண்கள் - 94438 80161, 73730 42666 என கூறி உள்ளார்

நீட் தேர்வை எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்காக எர்ணாகுளத்தில் 4 இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு உதவி மையத்திலும் 10 பேர் உள்ளனர்; 10 பேரில் ஒருவர் தமிழ்மொழி பேசக்கூடியவராக இருப்பார்

எர்ணாகுளம் தெற்கு- 9567466947, 9020606717;
எர்ணாகுளம் வடக்கு- 9048520012, 9895320567