தேசிய செய்திகள்

திப்பு சுல்தானைப் புகழ்ந்து பாகிஸ்தான் டுவிட் கர்நாடக தேர்தலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் + "||" + Ahead of Karnataka polls Pakistan remembers Tipu Sultan as tiger of Mysore

திப்பு சுல்தானைப் புகழ்ந்து பாகிஸ்தான் டுவிட் கர்நாடக தேர்தலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

திப்பு சுல்தானைப் புகழ்ந்து பாகிஸ்தான் டுவிட் கர்நாடக தேர்தலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
கர்நாடகத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளநிலையில், திப்பு சுல்தானைப் புகழ்ந்து பாகிஸ்தான் அரசு டுவிட் செய்துள்ளது. #TipuSultan
இஸ்லாமாபாத்

18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னன் திப்புசுல்தான். அவரின் 218-வது நினைவுநாள் இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் அரசு திப்புசுல்தானைப் புகழ்ந்து தனது அதிகாரப்பூர்வ தளத்தில் டுவீட் செய்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் திப்பு சுல்தான் குறித்து புகழ்ந்து டுட்வீட் செய்யப்பட்டு இருந்தது. அதில், ‘‘இந்திய வரலாற்றில் முக்கியமான, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து முதன்முதலாக விடுதலைக்காகக் குரல்கொடுத்த வீரர். மைசூரின் புலி’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், திப்பு சுல்தான் குறித்த வீடியோவையும் பாகிஸ்தான் அரசு தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளது.


கர்நாடக மாநிலத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில் பாகிஸ்தான் அரசு இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவையும், ட்வீட்டையும் வெளியிட்டு பிரிவினையை ஏற்படுத்தப்பாக்கிறது என்று பாஜகவினர் குற்றம்சாட்டி  உள்ளனர்.ஏற்கனவே திப்பு சுல்தான் ஜெயந்தியை வைத்து  கர்நாடகாவில் பாரதீய ஜனதாவும் காங்கிரசும் மோதிக்கொண்டன.