மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் உள்பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது - சென்னை வானிலை மையம் + "||" + In the interior of Tamil Nadu There is a possibility of thunderstorms with thunderstorm Chennai Weather Center

தமிழ்நாட்டின் உள்பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது - சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டின் உள்பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது - சென்னை வானிலை மையம்
தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை 

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

அதிகபட்சமாக வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் 108 டிகிரி வெப்பம் பதிவானது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் கடலாடியில் 5 செ.மீ. சிவகங்கையில் 4 செ.மீ. பதிவாகியுள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் உள்பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது என கூறினார்.