உலக செய்திகள்

பெண்ணின் வயிற்றில் 60 கிலோ கட்டி அதிர்ச்சியில் டாக்டர்கள் + "||" + In the stomach of the woman 60 kg tumor Doctors in shock

பெண்ணின் வயிற்றில் 60 கிலோ கட்டி அதிர்ச்சியில் டாக்டர்கள்

பெண்ணின் வயிற்றில் 60 கிலோ கட்டி அதிர்ச்சியில்  டாக்டர்கள்
உணவருந்த முடியாமல் தவித்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 60 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் அமைந்துள்ள டன்புரி பகுதியைச் ஏர்ந்த 38 வயது பெண் ஒருவர் நீண்ட நாட்களாக வையிற்று வலியால் சிரமப்பட்டார். அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வயிறு உப்பியநிலையில் அந்த் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் பெரிய கொண்ட கட்டி ஒன்று வளர்ந்திருப்பதாகவும், அதனாலையே அவரால் உணவருந்த முடியாமல் போனதாகவும்  வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தஅந்த பெண்ணுக்கு அவரது வயிற்றில்   கட்டி வளர்ந்து வருவதை கண்டறிந்தனர்.இது அவரது செரிமான அமைப்பை அழுத்தி வருவதால் அவரால் உணவருந்த முடியாமல் கடும் அவதிக்கு பட்டுவந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் மத்தியில் 20 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு ஒன்று 5 மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சையின் முடிவில் 60 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றியுள்ளனர்.தற்போது நலமுடன் இருக்கும் குறித்த பெண் அடுத்த 2 வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.