தேசிய செய்திகள்

புழுதி புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் நிதியுதவி + "||" + CM Yogi Adityanath distributes cheques to people affected by dust storm in Agra's Fatehabad

புழுதி புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் நிதியுதவி

புழுதி புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் நிதியுதவி
உத்தரப்பிரதேசத்தில் புழுதிப் புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கினார். #duststorm #YogiAdityanath
லக்னோ,

தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதைப்போல இடியுடன் கூடிய பெருமழை பெய்தது.

இந்த 5 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை மற்றும் புழுதி புயலில் சிக்கியும், மின்னல் தாக்கியும் கடந்த 2 நாட்களில் 124 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35 பேரும் பலியாகி இருப்பதாக உளதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டம்தான் இந்த பேரிடரால் அதிக பாதிப்பை சந்தித்து உள்ளது.

இந்தநிலையில், புழுதிப்புயலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வலியுறுத்தி உள்ளார்.

மேலும், புழுதிப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.