தேசிய செய்திகள்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உதவி செய்வதே எனது இலக்கு - சுஷ்மா சுவராஜ் + "||" + To help those Indians who are stuck at various corners of the world has become my life's aim Sushma Swaraj

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உதவி செய்வதே எனது இலக்கு - சுஷ்மா சுவராஜ்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உதவி செய்வதே எனது இலக்கு - சுஷ்மா சுவராஜ்
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்வதே எனது வாழ்நாள் இலக்கு என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். #PravasiBharatiyaDivas #SushmaSwaraj
புதுடெல்லி,

மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் சுஷ்மா சுவராஜ் செய்தியார்களிடம் பேசியதாவது:

அடுத்த ஆண்டு (2019 ) ஜனவரி மாதம் வாரணாசியில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறும். 

உலகம் முழுவதிலும் வாழும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்வதே எனது வாழ்நாள் இலக்காக கொண்டுள்ளேன். கடந்த 2015-ம் ஆண்டில் 'ராஹத் ஆபரேஷன்' மூலமாக ஏமனில் இருந்து  5000 பேரை பத்திரமாக மீட்டுள்ளோம். 

உலகின் எந்த மூலையாக இருந்தாலும் அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்கள் துயரத்தில் இருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எனது முயற்சிகளை மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.