தேசிய செய்திகள்

இந்தியாவில் மிகவும் நம்பகமான பிராண்டாக பதஞ்சலி உள்ளது பாபா ராம் தேவ் + "||" + Patanjali ranked as most trusted FMCG brand in India

இந்தியாவில் மிகவும் நம்பகமான பிராண்டாக பதஞ்சலி உள்ளது பாபா ராம் தேவ்

இந்தியாவில் மிகவும் நம்பகமான பிராண்டாக பதஞ்சலி உள்ளது பாபா ராம் தேவ்
இந்தியாவில் மிகவும் நம்பகமான பிராண்டாக பதஞ்சலி உள்ளதாக தனது டுவிட்டரில் பாபா ராம் தேவ் கூறியுள்ளார். #Patanjali
புதுடெல்லி,

யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி கடந்த 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம்  பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள் ரசாயனக் கலப்பு இல்லை என்றும், இயற்கையாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்  பிராண்ட் டிரஸ்ட் 2018-ன் அறிக்கையின் படி (FMCG) ஃபாஸ்ட் மூவிங் நுகர்வோர் பொருட்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான  ஃபாஸ்ட் மூவிங் பொருட்களில் முதல் இடத்தில் பதஞ்சலி உள்ளதாக பாபா ராம்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.