கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி + "||" + IPL Cricket; Bangalore team set a target of 128 for Chennai

ஐபிஎல்: சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி

ஐபிஎல்: சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 128 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018 #RCBVsCSK
புனே,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

புனேயில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. டுபிளெஸ்ஸிஸ், கரண் சர்மா, ஆசிஃப் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக முரளி விஜய், துருவ் ஷோரே, டேவிட் வில்லி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் வில்லி, ஷோரே ஆகிய இருவரும் ஐ.பி.எல்-லில் இந்த ஆட்டத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார்கள். அதேபோல பெங்களூர் அணியிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.. டி காக், வோரா, வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், எம். அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

பின்னர் பெங்களூர் அணியின் சார்பில், பார்தீவ் பட்டேல் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே மெக்கல்லம் 5(3) ரன்களில் நிகிடி பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து ஆட வந்த கேப்டன் வீராட் கோலி 8(11) ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரரான டி வில்லியர்ஸ் 1(4) ரன்னில் ஹர்பஜன் பந்து வீச்சில் டோனி மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக களமிறங்கிய மந்தீப் சிங் 7(13) ரன்களில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த பார்தீவ் பட்டேல் 37 பந்துகளை சந்தித்து தனது அரை சதத்தை பதிவு செய்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக பார்தீவ் பட்டேல் 53(41) ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. சென்னை அணியை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. இதில் அடுத்ததாக களமிறங்கிய, முருகன் அஸ்வின் 1(2) ரன்னிலும், கொலின் டி கிராண்ட்ஹோம் 8(8) ரன்னிலும், உமேஷ் யாதவ் 1(5) ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து ஆட வந்த டிம் சவுத்தி மற்றும் முகமது சிராஜ் ரன் ரேட்டை உயர்த்த போராடினர். 

டிம் சவுத்தி 36(26) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில், முகமது சிராஜ் 3(7)ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 128 ரன்கள் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டும், நிகிடி மற்றும் வில்லி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.