மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பெட்ரோல் டேங்கர் லாரி திடீர் தீ விபத்து + "||" + petrol Tanker Lorry sudden fire accident

கிருஷ்ணகிரி அருகே பெட்ரோல் டேங்கர் லாரி திடீர் தீ விபத்து

கிருஷ்ணகிரி அருகே பெட்ரோல் டேங்கர் லாரி  திடீர் தீ விபத்து
கிருஷ்ணகிரி அருகே பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரியின் இன்ஜின் பகுதியில் திடீர் தீ பற்றி எரிந்தது. 
டேங்கர் லாரியின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், ஓட்டுநர், கிளிநீர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். 

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   

தீ விபத்து நேர்ந்த பகுதி அருகே எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. சுமார் 1 கி.மீ தூரம் வரை பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  இந்த தீ விபத்தால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.