கிரிக்கெட்

ஐ.பி.எல்; பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி + "||" + IPL Cricket; Chennai won by 6 wickets in the match against Bangalore

ஐ.பி.எல்; பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல்; பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #IPL2018 #RCBVsCSK
புனே,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

புனேயில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

பெங்களூர் அணியின் சார்பில், பார்தீவ் பட்டேல் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே மெக்கல்லம் 5(3) ரன்களில் நிகிடி பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து ஆட வந்த கேப்டன் வீராட் கோலி 8(11) ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரரான டி வில்லியர்ஸ் 1(4) ரன்னில் ஹர்பஜன் பந்து வீச்சில் டோனி மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக களமிறங்கிய மந்தீப் சிங் 7(13) ரன்களில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த பார்தீவ் பட்டேல் 37 பந்துகளை சந்தித்து தனது அரை சதத்தை பதிவு செய்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக பார்தீவ் பட்டேல் 53(41) ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. சென்னை அணியை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. இதில் அடுத்ததாக களமிறங்கிய, முருகன் அஸ்வின் 1(2) ரன்னிலும், கொலின் டி கிராண்ட்ஹோம் 8(8) ரன்னிலும், உமேஷ் யாதவ் 1(5) ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து ஆட வந்த டிம் சவுத்தி மற்றும் முகமது சிராஜ் ரன் ரேட்டை உயர்த்த போராடினர். டிம் சவுத்தி 36(26) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில், முகமது சிராஜ் 3(7)ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டும், நிகிடி மற்றும் வில்லி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் சென்னை அணிக்கு 128 ரன்கள் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் களமிறங்கினர். இதில் ஷேன் வாட்சன் 11(14) ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக அம்பதி ராயுடுவுடன்  சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் மூலம் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா 25(21) ரன்களில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து அம்பதி ராயுடுவும் 32(25) ரன்கள் எடுத்திருந்த நிலையில் முருகன் அஸ்வின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக த்ருவ் ஷோரேவும் 8(9) ரன்களில் கிராண்ட்ஹோம் பந்தில் கேட்ச் ஆனார். பின்னர் கேப்டன் டோனியுடன் டிவெயின் பிராவோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. கடைசியில் அதிரடி காட்டிய டோனி 31(23) ரன்களும், டிவெயின் பிராவோ 14(17) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியாக சென்னை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 128 எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.