தேசிய செய்திகள்

பாஜகவிற்கு வாக்களிக்க வாக்குசாவடிக்கு வாக்காளர்களின் கை, கால்களை கட்டி அழைத்து வாருங்கள் - எடியூரப்பா + "||" + BJP Karnataka chief ministerial candidate BS Yeddyurappa on Saturday advised people to tie hands and legs of the non-voters and make them vote in favour of Mahantesh Doddagoudar, BJP candidate from Kittur

பாஜகவிற்கு வாக்களிக்க வாக்குசாவடிக்கு வாக்காளர்களின் கை, கால்களை கட்டி அழைத்து வாருங்கள் - எடியூரப்பா

பாஜகவிற்கு வாக்களிக்க வாக்குசாவடிக்கு வாக்காளர்களின் கை, கால்களை கட்டி அழைத்து வாருங்கள் - எடியூரப்பா
பாஜகவிற்கு வாக்களிக்க வாக்குசாவடிக்கு வாக்காளர்களின் கை, கால்களை கட்டி அழைத்து வாருங்கள் என்று முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா கூறியுள்ளார். #BJP #BSYeddyurappa
பெங்களூர்,

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகத்தில்  போட்டி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் பெலகாவி மாவட்டம் கிட்டூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மகந்தேஷ் பஷ்வந்தராயை ஆதரித்து, முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கர்நாடக சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றிபெற, பாஜக தொண்டர்கள், ஓட்டளிக்காமல் இருக்கும் வாக்காளர்களின் கை, கால்களை கட்டி ஓட்டிசாவடிக்கு அழைத்து வந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

எடியூரப்பாவின் இந்த பேச்சு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.