மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் + "||" + The bomb threat to Palani's house EdappadiPalaniswami

முதல்-அமைச்சர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்-அமைச்சர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #EdappadiPalaniswami
சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி வீடு உள்ளது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  கடலூரைச் சேர்ந்த பிரதீப் என்ற பெயரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  

மோப்பநாய்கள் உதவியுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்துள்ளது.  மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.