கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட்; சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி + "||" + IPL Cricket; Sunrisers Hyderabad scored 164 runs for Delhi team

ஐ.பி.எல் கிரிக்கெட்; சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

ஐ.பி.எல் கிரிக்கெட்; சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018 #SRHVsDD
ஐதராபாத்,     

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி-டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


டெல்லி அணியில் இரண்டு மாற்றங்களாக, கிறிஸ்டியன், ஓஜா சேர்க்கப்பட்டு கொலின் முன்றோ, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டு பாசில் தம்பி நீக்கப்பட்டிருந்தார்.

டெல்லி அணியின் சார்பில், பிரித்வி ஷா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் களமிறங்கினர். இதில் மேக்ஸ்வெல் 2(3) ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார். பின்னர் ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த பிரித்வி ஷா அதிரடியில் கலக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக  பிரித்வி ஷா 65(36) ரன்கள் எடுத்திருந்த போது ரஷித் கான் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஷ்ரேயாஸ் அய்யருடன் ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். ரன் ரேட் மெதுவாக உயர்ந்த போது ஷ்ரேயாஸ் அய்யர் 44(36) ரன்களில் கெளல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து ஓஜாவும் 1(4) ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேற ரிஷாப் பாண்டும் 18(19) ரன்களில் ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். இறுதியில் விஜய் சங்கர் 23(13) ரன்களும், கிறிஸ்டெய்ன் 7(9) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.