தேசிய செய்திகள்

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம்: 2 பேர் கைது + "||" + 2 men arrested for IPL betting

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம்: 2 பேர் கைது

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம்: 2 பேர் கைது
டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். #IPL
புதுடெல்லி,

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை வைத்து ஆன்லைன் முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட  2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். வடக்கு டெல்லியில் உள்ள ஷக்தி நகரில் வைத்து தீபக் குக்ரேஜா (வயது 43), விக்ரம் சர்மா (வயது 38) ஆகிய இருவரும் மே 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில், சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்கூறிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.