மாநில செய்திகள்

தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்னர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் - கராத்தே தியாகராஜன் + "||" + Rajinikanth's party starts 6 months before the election - Karate Thiagarajan

தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்னர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் - கராத்தே தியாகராஜன்

தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்னர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் - கராத்தே தியாகராஜன்
தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்னர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். #RajiniKanth
சென்னை,

தேர்தல் அறிவிப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பு தான் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என ரஜினியுடனான சந்திப்புக்கு பின் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

 ரஜினிகாந்த் கடந்த மாதம் 23-ம் தேதி அமெரிக்காவுக்கு உடல்பரிசோதனை செய்யச் சென்றார். அமெரிக்காவில் உடல்நல பரிசோதனை மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் அவர் இருக்கும்போது வெளிவந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.


பின்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்தல் அறிவிப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பு தான் ரஜினிகாந்த் தனது கட்சியை தொடங்குவார் என கராத்தே தியாகராஜன் ரஜினியுடனான சந்திப்புக்கு பின்னர் கூறினார்.