உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் தேர்தலில் போட்டி + "||" + Iraq journalist who threw shoes at George W Bush stands for parliament

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் தேர்தலில் போட்டி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் தேர்தலில் போட்டி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #IraqElections
பாக்தாத்,

2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து புஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ குறிவைத்து வீசினார்.

புஷ் கீழே குனிந்து தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் அப்போது உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ்தான் காரணம் என்பதால் ஷூவை வீசினேன் என அல்-ஸைதி தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நன்னடத்தை காரணமாக 9 மாதங்களில் அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர், அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி நடக்க உள்ள ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அல்-ஸைதி போட்டியிட உள்ளார்.  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள அல்-ஸைதி, “திருட்டு அரசியல்வாதிகளை சிறையில்  தள்ளுவதுதான் எனது இலக்கு. அப்போதுதான் நாடு வளம் பெறும்” என தெரிவித்துள்ளார்.