மாநில செய்திகள்

மாரடைப்பால் இறந்த கிருஷ்ணசாமியின் மனைவியிடம் போனில் ஆறுதல் கூறினார் முதல் அமைச்சர் + "||" + TN cm EPS condolence to the krishnasamy who died in the kerala

மாரடைப்பால் இறந்த கிருஷ்ணசாமியின் மனைவியிடம் போனில் ஆறுதல் கூறினார் முதல் அமைச்சர்

மாரடைப்பால் இறந்த கிருஷ்ணசாமியின் மனைவியிடம் போனில் ஆறுதல் கூறினார் முதல் அமைச்சர்
எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் மனைவியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார். #NEET #NEETExam
சென்னை,

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியதால், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்கு சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த  கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தந்தை மரணமடைந்தது தெரியாமல், மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார்.  தேர்வு எழுதி முடிந்து வந்த கஸ்துரி மகாலிங்கத்திடம் தகவல் தெரிவித்த அதிகாரிகள், மாணவனை அழைத்துச்சென்றனர். உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளம் சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  

முதல் அமைச்சர் ஆறுதல்

மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின், தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து இருந்தார். உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் மனைவியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.