மாநில செய்திகள்

மதுரையில் இந்தியில் நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் 120 மாணவர்கள் அதிர்ச்சி + "||" + 120 students were shocked because the NEET question was given in Hindi

மதுரையில் இந்தியில் நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் 120 மாணவர்கள் அதிர்ச்சி

மதுரையில் இந்தியில் நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் 120 மாணவர்கள் அதிர்ச்சி
மதுரையில் இந்தியில் நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் 120 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். #NEET #NEETExam #NEETUG2018
சென்னை,

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரத்து 648 மாணவர்களும், 7 லட்சத்து 46 ஆயிரத்து 76 மாணவிகளும், ஒரு திருநங்கையும் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களில் சுமார்  1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு  எழுதினர்.

இந்தநிலையில் மதுரையிலுள்ள மையத்தில் வினாத்தால் குளறுபடியால் நீட் தேர்வு தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியில் நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் 120 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் முறையிட்டதால் வினாத்தாள் மாற்றி தரப்பட்டு தாமதமாக நீட் தேர்வு நடந்து வருகிறது. 

120-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வினாத்தாள் வரவழைக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.  தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழில் வினாத்தாள் தராமல் ஆங்கிலம், இந்தியில் வினாத்தாள் தரப்பட்டது. வினாத்தாள் குளறுபடி ஏற்பட்ட மையத்தில் மதிய உணவுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.