மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதற்காக இனி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் - முத்தரசன் + "||" + There will be a lot of struggles - Muthrasaran

தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதற்காக இனி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் - முத்தரசன்

தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதற்காக இனி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் - முத்தரசன்
தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதற்காக இனி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #Krishnasamy #NEET
சென்னை,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அரசு ஊழியரான இவர், தனது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுத கேரள மாநிலம், எர்ணாகுளம் அழைத்து சென்றார். மகன் தேர்வு எழுத சென்ற நிலையில், கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  

எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமலேயே தமிழகம் எடுத்து வரப்பட உள்ளது. கிருஷ்ணசாமி உடலை எடுத்து வரும் ஆம்புலன்சுக்கு தமிழக எல்லை வரை கேரள போலீசாரும், பின்னர் தமிழக போலீசாரும் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

இந்தநிலையில், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கிருஷ்ணசாமியின் உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியல்   ஈடுபட்டு வருகின்றனர்.  நீட் தேர்வில் விலக்கு கோரியும், கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதற்காக இனி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.  தமிழக மாணவர்களை வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுத வைத்து மத்திய அரசு வஞ்சிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.