மாநில செய்திகள்

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - விஜயகாந்த் + "||" + Vijayakanth should be given a government job for one of the Krishnasamy's family members

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - விஜயகாந்த்

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - விஜயகாந்த்
நீட் தேர்வெழுத மகனை கேரளா அழைத்துச்சென்ற தந்தை மரணத்திற்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் தன்னுடைய அனுதாபங்களை தெரிவித்துள்ளார். #Vijayakanth #NEET
சென்னை,

மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த தோ்வில் தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதன் விளைவாக நீட் தேர்வு எழுதுவதற்காக தன்னுடைய மகனை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த கூறியதாவது,

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் போதாது என்பதால் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் எனவும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை