மாநில செய்திகள்

எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு + "||" + Delivering to Krishnasamy's physical relative

எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு
எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. #Krishnasamy #NEET
சென்னை,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அரசு ஊழியரான இவர், தனது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுத கேரள மாநிலம், எர்ணாகுளம் அழைத்து சென்றார். மகன் தேர்வு எழுத சென்ற நிலையில், கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

இந்தநிலையில் கிருஷ்ணசாமி உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்படாமல் உறவினர் அன்பரசனிடம் ஒப்படைக்கப்பட்டது.  எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் கிருஷ்ணசாமியின் உடலை மைத்துனர் அன்பரசன் பெற்றுக்கொண்டார். 

எர்ணாகுளத்தில் இருந்து கிருஷ்ணசாமியின் உடல் திருவாரூர் விளக்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.   கிருஷ்ணசாமி உடலை எடுத்து வரும் ஆம்புலன்சுக்கு தமிழக எல்லை வரை கேரள போலீசாரும், பின்னர் தமிழக போலீசாரும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். 

தேர்வு எழுதிவிட்டு வந்த மகன் கஸ்தூரி மகாலிங்கம், தந்தை உடலை மருத்துவமனையில் பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை