தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: ராணுவத்தினர் மீது போராட்டகாரர்கள் கல் வீசி தாக்குதல் + "||" + 5 Civilians Killed as Clashes Break Out After Encounter in Shopian

ஜம்மு காஷ்மீர்: ராணுவத்தினர் மீது போராட்டகாரர்கள் கல் வீசி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர்:  ராணுவத்தினர்  மீது போராட்டகாரர்கள் கல் வீசி தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. #Shopianencounter
ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாடிகாம் பகுதியில்  ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற சண்டையில்  5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இந்த நிலையில் சண்டை நடைபெற்ற இடத்தில் ராணுவத்தினர் சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ராணுவத்தினரை சுற்றி வளைத்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். 

பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.