சினிமா செய்திகள்

நீட் விவகாரம்: ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மாணவர்களையுமா? விவேக் கேள்வி + "||" + I will tell you one thing actor Vivekh

நீட் விவகாரம்: ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மாணவர்களையுமா? விவேக் கேள்வி

நீட் விவகாரம்: ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மாணவர்களையுமா? விவேக் கேள்வி
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மாணவர்களையுமா? இது தகுமா? என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். #actorVivekh
சென்னை,

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரத்து 648 மாணவர்களும், 7 லட்சத்து 46 ஆயிரத்து 76 மாணவிகளும், ஒரு திருநங்கையும் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களில் சுமார்  1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு  எழுதினர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, மராத்தி, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

இந்தநிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மாணவர்களையுமா? இது தகுமா? ஒன்று பணிவோடு கூறுகிறேன். மக்களின் அபிமானம் பெற விரும்புபவர்கள், முதலில் மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற வேண்டும்.மாணவர்களின் மன உளைச்சல், பெற்றோர்களின் பெரும் கோபமாக மாறக்கூடாது என பதிவிட்டுள்ளார்.