தேசிய செய்திகள்

காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி வைரலாகும் படம்!! + "||" + Mukesh Ambani’s daughter Isha Ambani to marry Anand Piramal of Piramal group

காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி வைரலாகும் படம்!!

காதலருடன்  முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி வைரலாகும் படம்!!
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. #MukeshAmbani #IshaAmbani
மும்பை,

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷாவும் இரட்டையர்கள். 3-வது ஆனந்த், இதில் ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இஷா அம்பானிக்கும் டிசம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் வைத்து ஆனந்த பிரமோல், இஷாவிடம் தனது காதலை வெளிபடுத்தி உள்ளார். இவர்கள் இருவர்ம் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 

ஆனந்த் பிரமோல், ரியல் எஸ்டேட் நிறுவனமான Piramal Realty இன் நிறுவனர் ஆவார், Piramal Group இன் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.