உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பேர் கடத்தல் + "||" + 7 Indian Engineers Kidnapped In Afghanistan's Baghlan, Say Reports

ஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பேர் கடத்தல்

ஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பேர் கடத்தல்
ஆப்கானிஸ்தான் பக்லான் பகுதியில் பணிபுரிந்த 7 இன்ஜினியர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். #Indianengineersabducted
காபூல்,

ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து மினி பேருந்தில் மின் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பேருந்தை வழி மறித்து அவர்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.  கடத்தப்பட்ட இன்ஜினியர்களை தேடும் பணியில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.  இது தொடர்பாக இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.  இது தொடர்பாக ஆப்கான் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.