தேசிய செய்திகள்

ஊடகங்களில் இந்தியில் மட்டுமே செய்தி ஒளிபரப்ப திரிபுரா அரசு முடிவு + "||" + Tripura Govt Proposes Hindi as Language for TV News Over Kokborok

ஊடகங்களில் இந்தியில் மட்டுமே செய்தி ஒளிபரப்ப திரிபுரா அரசு முடிவு

ஊடகங்களில் இந்தியில் மட்டுமே செய்தி ஒளிபரப்ப திரிபுரா அரசு முடிவு
இந்தியில் மட்டுமே செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்று உள்ளூர் ஊடகங்களுக்கு திரிபுரா அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது. #BharatiyaJanataParty
அகர்தலா,

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டியது.  பாஜக&ஐபிஎப்டி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 

இந்தநிலையில் மாநிலத்தில் உள்ள உள்ளூர் டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் செய்திகள் இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.  2-வது அலுவல் மொழியாக உள்ள கோக்போராக்கிற்கு மாற்றாக இதனை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும் தேச பற்றை வளர்க்கவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்ற தகவல் மற்றும் கலாச்சார விவகாரத்துறை அமைச்சக ஆலோசனைக்கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா அரசின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.