தேசிய செய்திகள்

2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு: 55.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று அனுதீப் துரிஷெட்டி முதல் இடம் + "||" + UPSC releases civil services 2017 marks, topper Durishetty Anudeep scored 55.60 percent

2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு: 55.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று அனுதீப் துரிஷெட்டி முதல் இடம்

2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு:  55.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று அனுதீப் துரிஷெட்டி முதல் இடம்
2017-ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. #UPSC
புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு (2017) முடிவுகள் கடந்த மாதம் 27–ந் தேதி வெளியிடப்பட்டன.  இந்த தேர்வில் 750 ஆண்கள், 240 பெண்கள் என 990 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் 55.60 சதவீத மதிபெண்களுடன் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அனுதீப்  துரிஷெட்டி முதலிடத்தில் பிடித்துள்ளார். 

மொத்தம் 2,025 மதிப்பெண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் அனுதீப் எழுத்து தேர்வில் 950 மதிபெண்களும், நேர்முகத்தேர்வில் 176 மதிப்பெண்களும் பெற்று 1126 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தையின் தாய் அனு குமாரி எழுத்து தேர்வில் 937 மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வில் 187 மதிப்பெண்களை பெற்று மொத்தமாக 1124 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயெ 2-வது இடம் பிடித்துள்ளார்.

மூன்றாம் இடத்தை சச்சின் குப்தா என்பவர் பெற்றுள்ளார்.