தேசிய செய்திகள்

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கழிப்பறைக்கு 4. கி.மீ தூரம் நடக்கும் மாணவியர் + "||" + Buckets In Hand, Girls Walk 4 Km In Madhya Pradesh's Damoh For Toilet

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கழிப்பறைக்கு 4. கி.மீ தூரம் நடக்கும் மாணவியர்

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கழிப்பறைக்கு 4. கி.மீ தூரம்  நடக்கும் மாணவியர்
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மாணவியர் தினமும் 4.கி.மீ தூரம் வரை நடந்து சென்று கழிப்பறையை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும் கிராம வாசி பெண்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தாமோ மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி படிக்கும் பள்ளி மாணவியர் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காலை கடனை கழிப்பதற்காக  கையில் வாளியுடன் தினமும் 4 கி.மீ தூரம் நடந்து சென்று கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். 

இது குறித்து விடுதி காப்பாளர் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். அவ்வபோது விடுதிக்கு லாரியில் தண்ணீர் கொண்டு வரப்படும்.  ஆனால் இந்த ஆண்டு கலெக்டரிடம் புகார் அளித்தும் தண்ணீர் பற்றாக்குறைக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில்,

இந்த சம்பவம் குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை தீர்க்க முயற்சி செய்து வருகிறோம். விரைவில் இதுக்கு தீர்வு காணப்படும் எனக்கூறினார்.