உலக செய்திகள்

பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து: 10 பேர் பலி + "||" + Pakistan:10 killed, 5 injured when truck overturned on a passenger van

பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து: 10 பேர் பலி

பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து: 10 பேர் பலி
பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமபாத்,

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணம் அபோதாபாத் மாவட்டம் சப்சி மந்தி மூர் என்ற பகுதியில் 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.  

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.